• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் உடல் வெப்ப நிலையயை அறிந்து கொள்ளும் ரோபோ இயந்திரம் அறிமுகம்

August 11, 2020 தண்டோரா குழு

அரசு ஆவணங்களை காண்பித்து உடல் வெப்ப நிலையயை அறிந்து கொள்ளும் ரோபோ இயந்திரத்தை தனியார் நிறுவனம் வடிவமைத்து உள்ளது.

கோவை கோல்டுவின்ஸ் பகுதியை சேர்ந்த பேல்கன் ஸ்கொயர் என்ற தனியார் நிறுவனம் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்கள் மற்றும் நிறுவனங்களில் உடல் வெப்பநிலை அறிந்து கொள்ளும் ரோபோ இயந்திரத்தை வடிவமைத்து உள்ளது. இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது.

அந்நிறுவனத்தின் தலைவர் லோகநாதன் தெரிவிக்கையில்,

தற்போது கொரோனா தொற்று காரணமாக உடல் வெப்பநிலை கண்டறிய தெர்மாமீட்டர் மூலம் சோதனைகள் செய்யபடுகிறது.இதில் பல்வேறு சிரமங்கள் உள்ள நிலையில்இதற்கு மாற்றாக அரசு வழங்கி உள்ள ஆதார்,ஓட்டுனர் உரிமம்,பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை காண்பித்து ரோபோ இயந்திரத்தின் மூலம் எளிமையாக கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தனியார் நிறுவனங்கள் வழங்கிய உள்ள மின்னணு அடையாள அட்டையில் மூலம் அட்டையை காண்பித்த பின்னர் மணிகட்டை காண்பித்தால் உடலின் வெப்பநிலையை இயந்திரம் காண்பிக்கும் வகையிலும் பின்னர் ஆட்டோ சேனிடைசிங் செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.ஒரு நிமிடத்தில் 30 பேர் வரை வெப்ப சோதனை செய்ய முடியும் எனவும் இதில் பெறப்படும் தகவல்களை கிளவுட் ஸ்டோரேஜ் மூலம் சேமித்து வைக்கும் வகையில் வடிவமைத்து உள்ளதாக கூறினார்.

பள்ளிகள்,கல்லூரிகள், அரசு அலுவலங்கள், தனியார் நிறுவனங்களில் இதனை எளிதாக பயன்படுத்த முடியும் எனவும் இதை எளிதாக கையாளவும் முடியும் எனவும் தெரிவித்தார். மின்சார இல்லாத நேரங்களில் இதில் பொருத்தபட்டு உள்ள பேட்டரி மூலம் சோதனை செய்து கொள்ளலாம் எனவும் தற்போது கொரோனா தொற்று கோவை மாவட்டத்தில் அதிக அளவில் அதிகரித்து வரும் நிலையில் தொற்று உடல் வெப்பத்தை கண்டறிந்து தொற்றை கட்டுபடுத்த இந்த இயந்திரம் உபயோகமாக இருக்கும் என்றார்.ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் மூலம் இது உருவாக்கபட்டதாகவும் மணிகட்டு மூலம் வெப்ப நிலை கண்டறியும் இந்த வகை இயந்திரம் இதுவே முதல் முறை எனவும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது அந்நிறுவனத்தின் விற்பனை மேலாளர் கார்த்திக்,முதன்ம மென் பொறியாளர் ஸ்டான்லி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க