• Download mobile app
27 Jul 2024, SaturdayEdition - 3090
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் இளம்தொழில் முனைவோர் மையம் சார்பில் யெஸ்கான் 24 (YESCON 2024 )

January 5, 2024 தண்டோரா குழு

YESCON 2024, இளம் தொழில்முனைவோர் மையம் (YES) முதன்மை மாநாடு இன்று தொடங்கப்பட்டது.இது 2012 ஆம் ஆண்டு முதல், தொழில்முனைவோரின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட YES இன் வருடாந்திர மாநாடு ஆகும்.

கோவையில் இரண்டு நாட்களுக்கு (ஜனவரி 5 மற்றும் 6 ஆம் தேதிகளில்) யெஸ்கான் மாநாடு கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

கொடிசியா தலைவர் V.திருஞானம் மாநாட்டை தொடங்கி வைத்தார்.YES தலைவர் நீதி மோகன் முத்துக்குமார், ஒருங்கிணைப்பாளர் மற்றும் தீபக் ராஜ்குமார்,இணை கன்வீனர் மற்றும் YES இன் மற்ற அலுவலகப் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

YES ஆனது 2004 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் வர்த்தக சபையால் நிறுவப்பட்டது, இது தொழில்முனைவோர் தொடர்பான சவால்கள் மற்றும் இடர்பாடுகளை வெற்றிகரமாக வழிநடத்த இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.அப்போதிருந்து, YES உருவாகி வளர்ந்து வணிக சமூகத்தில் பெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ளது.

YESCON 2024 கோவையில் ‘மிகுதியாய் உணர்’ – மிகுதியை உணருங்கள் என்ற தலைப்பில் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 2500க்கும் மேற்பட்ட YES உறுப்பினர்கள் இந்த YESCON இல் பங்கேற்கின்றனர்.

இந்த மாபெரும் நிகழ்வின் ஒரு பகுதியாக நடக்கும் YESMART வர்த்தக கண்காட்சியில் 100+ ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க