• Download mobile app
14 Oct 2024, MondayEdition - 3169
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் இன்று துவங்கியது ஆசியா நகை கண்காட்சி – ஜனவரி 21 வரை நடக்கிறது !

January 19, 2024 தண்டோரா குழு

கோயம்புத்தூர் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த ஆசிய நகை கண்காட்சி 2024 கோவை ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள தாஜ் விவான்டா ஹோட்டலில் 2024 ஜனவரி 19, 20, 21 ஆகிய 3 நாட்கள் நடக்கிறது. திருணம் மற்றும் விழாக்கால நகை காண்காட்சியுடன் விற்பனையும் நடக்கிறது. இந்தியாவின் மிகச்சிறந்த வடிவமைப்புகள், பிராண்டுகளை ஒரே கூரையின் கீழ் வாங்கலாம்.

ஆசியா ஜூவல்ஸ் கண்காட்சி 2024 தென்னிந்தியாவின் மிகவும் கவர்ச்சிகரமான முக்கிய கண்கட்சியாக திகழ்கிறது. இக்கண்காட்சி கோவை, ரேஸ்கோர்ஸ், தாஜ் விவான்டா ஓட்டலில் 2024 ஜனவரி 19 இன்று துவங்கி 20, 21 ஆகிய நாட்களில் காலை 10.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடக்கிறது. எப்போதும் வந்திராத தனித்துவமிக்க தங்க நகைகள், இந்த கண்காட்சியில் இடம் பெறுகிறது. அகில இந்திய அளவில் முன்னணி, கைவினை கலைஞர்கள் உருவாக்கிய நகைகள், ஒரே குரையின் கீழ் கிடைக்கும்.

கண்காட்சியை இன்று மதியம் 12 மணிக்கு, கோவை கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயக்குனரும் செயலாளருமான முனைவர் சி. எ. வாசுகி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். கவுரவ விருந்தினராக நேரு கல்வி குழுமத்தின் இயக்குனர் (மக்கள் தொடர்பு) டாக்டர் அ. முரளிதரன் பங்கேற்றார்.

இந்த ஆசிய நகை கண்காட்சியானது, உயர்தர நுண்கலை, பிராண்ட் தங்கம் மற்றும் வரை நகைகளுக்கு முக்கியத்துவம் பெற்றது. தற்போதுள்ள நுண்கலை தங்க நகைகள், வைர நகைகள், பிளாட்டினம் நகைகள், பாரம்பரிய நகைகள், திருமண நகைகள், அரிதான கல் நகைகள், குந்தன், ஜடாவு மற்றும் போல்கி, வெள்ளி நகைகள் இடம் பெற்றுள்ளன.

கோவையில் மிக அருமையான தங்க நகை கண்காட்சி இது.வரும் விழாக்காலத்திற்கும், திருணங்களுக்கும் உங்கள் நகைகளை இங்கு வாங்கலாம்.முன்பதிவும் செய்யலாம். சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்ட இந்த நகைகளை வாங்க நேர்த்தியான இடம். சர்வதேச தரம் வாய்ந்த நகைகளை தென்னிந்திய அளவில் இந்த கண்காட்சி இடம் பெறச் செய்துள்ளது.

மும்பை,பெங்களுரு, டில்லி, சென்னை மற்றும் கோவையில் உள்ள முன்னணி நிறுவனங்களின் சொகுசான நகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அகில இந்திய அளவிலான இந்த கண்காட்சியில், வராஸ்ரீ ஜூவல்லர்ஸ் (பெங்களுரு), சீகல் ஜூவல்லர்ஸ் (டில்லி), நாகா கிரியேஷன்ஸ் (மும்பை), இபான் ஹவுஸ் (மும்பை), சிரியான் ஜூவல்ஸ் (மும்பை), ஜிவா ஜூவல்லரி (மும்பை), யுப் ஜூவல்லரி (மும்பை), என்ஏசி ஜூவல்ஸ் (சென்னை), டயமன்ட் ஜூவல்லரி (மும்பை), எப்இசட் ஜெம்ஸ் (ஜெய்ப்பூர்), பிஇஎம் டயமன்ஸ் (திருப்பூர்), அடுல் ஜூவல்லரி (டில்லி) மற்றும் பல நகரங்களை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

மேலும் படிக்க