• Download mobile app
08 Dec 2025, MondayEdition - 3589
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோயம்புத்தூர் டே என்ற எழுத்துக்கள் வடிவில் அமர்ந்து பள்ளி மாணவர்கள் கொண்டாட்டம்

November 25, 2022 தண்டோரா குழு

கோவை தினத்தை ஒட்டி கோவையில் உள்ள தனியார் பள்ளியில் கோவை மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக ஹேப்பி கோயம்புத்தூர் டே என்ற எழுத்துக்கள் வடிவில் மாணவ மாணவிகள் அமர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தமிழகத்தில் தொழில்துறை அதிகமாக உள்ள நகரமும் அதே போல தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற அழைக்கப்படுவதும் கோவையாகும். இத்தகைய
கோவை நகரம் உருவாகி 218 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி கோவை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.கடந்த 1804 ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி கோவை நகரம் உருவானதாக கூறப்படும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 24ஆம் தேதி கோவை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள வீசிஎஸ்எம் என்ற தனியார் பள்ளியில் மாணவ மாணவிகள் 400க்கும் மேற்பட்டோர் ஹேப்பி கோயம்புத்தூர் டே என்ற எழுத்துக்கள் வடிவில் மைதானத்தில் அமர்ந்து கோவை மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும் படிக்க