• Download mobile app
27 Jul 2024, SaturdayEdition - 3090
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கே.எம்.சி.எச்மருத்துவமனை நடத்திய விநோத புற்றுநோய் விழிப்புணர்வு

October 9, 2023 தண்டோரா குழு

கோவையில் கே.எம்.சி.எச். மருத்துவமனை சார்பாக நடைபெற்ற மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கோவை பந்தய சாலை பகுதி முழுவதும் பிங்க் வண்ணத்தால் ஒளிர வைத்தது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவை கே.எம்.சி.எச் மருத்துவமனை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள டவர் பகுதி முழுவதும் பிங்க் நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

கே.எம்.சி.எச்.மருத்துவமனையின் துணை தலைவர் தவமணி தேவி பழனிசாமி, நிர்வாக இயக்குனர் அருண் பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில்,சிறப்பு விருந்தினர்களாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மாநகராட்சி ஆணையர் பிரதாப்,மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பவானீஸ்வரி,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், காவல்துறை இணை ஆணையர் சந்தீஷ், ஆகியோர் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.

நிகழ்ச்சியில்,கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள மீடியா டவர் மற்றும் பந்தய சாலை முழுவதும் பிங்க் நிற ஒளியால் ஒளிரச் செய்யப்பட்டது.திடீரென அப்பகுதி முழுவதும் பிங்க் வண்ணத்தால் ஒளிரவே அங்கிருந்த பொதுமக்கள் ஆரவாரத்துடன் அதனை வரவேற்றனர்.

மார்பக புற்றுநோயை வெற்றி கொள்வதில் எடுத்து வரும் முயற்சிகளுக்கும் அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களுக்கும் ஆதரவு தெரிவிக்கும் அடையாளமாகவும் பிங்க் வண்ணம் இருப்பதால் உலக சுகாதார நிறுவனம் அக்டோபர் மாதத்தை பிங்க் மாதமாக அறிவித்துள்ளது. அந்த வகையில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பந்தய சாலை முழுவதும் பிங்க் வண்ணத்தால் ஒளிர செய்யப்பட்டதால் பொதுமக்கள் பரவசத்துடன் அதனை கண்டு ரசித்தனர்.

மார்பக புற்றுநோய் என்பது குணப்படுத்த முடியாத நோய் இல்லை எனவும் அதற்கான அதிநவீன மருத்துவ சிகிச்சைகள் தங்களது மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் துணை தலைவர் தவமணி தேவி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க