• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மினார் குழுமத்தின் புதிய லோஹித் டிஎம்டி எப்இ 500 டி ஸ்டீல் அறிமுகம்

November 21, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் முதல் முறையாக கோவையில் மினார் குழுமத்தின் புதிய லோஹித் டிஎம்டி எப்இ 500 டி ஸ்டீல் அறிமுகம் செய்யப்பட்டது.

கோவை கேரளாவை சேர்ந்த மினார் குழும நிறுவனங்கள், தனது புதிய பிராண்ட் லோஹித் டிஎம்பி எப்இ 500 டி ஸ்டீல் பார்களை தமிழ்நாட்டில் முதல் முறையாக கோவையில் அறிமுகம் செய்தது.

கோவை ரெசிடென்ஸி ஓட்டலில் நடந்த அறிமுக விழாவில் தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர் அருண் விஜய் மற்றும் டிஎம்டி ஸ்டீல் பார் டீலர்கள் பங்கேற்றனர்.இதில்,மினார் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் முகமது ஷபி நிருபர்களிடம் கூறியதாவது:

லோஹித் டிஎம்டவி எப்இ 500டி’ என்ற ஸ்டீல் பார்கள் தமிழகத்தில் நவம்பர் 20, 2020 வெள்ளியன்று கோவையில் முதல்முறையாக அறிமுகம் செய்கிறது.இந்த பிராண்ட், கேரளாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. எங்களது தரம் மற்றும் சிறப்புத்தன்மையால் விற்பனை வெற்றிகரமாக துவங்கியுள்ளது. கேரளா சந்தையை தொடர்ந்து, தற்போது தமிழ்நாட்டில் கோவையில் அடியெடுத்து வைத்து, டீலர்கள் மற்றும் விநியோக தொடரை உருவாக்கவுள்ளோம்.தொடர்ந்து ஏற்படும் விற்பனை, தேவையை ஆராய்ந்து 150 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம்.
சரியான தரம், வலிமைக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். சரியான விநியோக தொடர், டீலர்களை அமைத்து விற்பனை செய்யவுள்ளோம். கேரளாவில் நாங்கள் வெற்றி பெற காரணமாக அமைந்தது, தரமும் சேவையும் தான்.

இவ்வாறு, அவர் கூறினார்.

மேலும் படிக்க