• Download mobile app
27 Jul 2024, SaturdayEdition - 3090
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கிருஷ்ணா டிராபி 2024 – மாநில அளவிலான பொறியியல் கல்லூரிகள் ஆசிரியர்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி

May 13, 2024 தண்டோரா குழு

கோவைப்புதூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில், இரண்டாவது ஸ்ரீ கிருஷ்ணா டிராபி 2024 -மாநில அளவிலான பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இக்கிரிக்கெட் போட்டி ஆசிரியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக் கிரிக்கெட் போட்டியை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் கே.ஆதித்யா துவக்கி வைத்தார். இப்போட்டிகளில் எஸ்என்எஸ் இன்ஜினியரிங்,பாவை இன்ஜினியரிங், ஸ்ரீ சக்தி இன்ஜினியரிங்,அக்ஷயா இன்ஜினியரிங், ஹிந்துஸ்தான் இன்ஜினியரிங் கல்லூரி, கேபிஆர் இன்ஜினியரிங், நேரு இன்ஜினியரிங், ஆர்விஎஸ் திண்டுக்கல், பண்ணாரி அம்மன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, டாக்டர்.மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, ஸ்டடி வேர்ல்டு இன்ஜினியரிங் கல்லூரி, ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் விவேகானந்தா கல்லூரிகள் அணிகள் பங்கேற்கும்.

இதனிடையே, ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலரான எஸ்.மலர்விழி அணியினரை வெற்றி பெற வாழ்த்தினார் . மேலும் இக் கல்லூரியின் முதல்வர் முனைவர் எம்.ஜி.சுமித்ரா வரவேற்று, வீரர்களை ஊக்கப்படுத்தினார். இத் தொடக்க நிகழ்ச்சிக்கு ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் குழும இயக்குநர் முனைவர் .சி.என்.நாராயணா தலைமை வகித்து வீரர்களுடன் பேசினார். ஸ்டடி வேர்ல்ட் இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் முனைவர். கோமதி இவ் விழாவில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் சி.மாரிசெல்வம் போட்டிகளையும் ஒருங்கிணைத்தார்.

தொடக்க நாளில் இரண்டு போட்டிகள் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் எஸ்என்எஸ் பொறியியல் கல்லூரி இடையேயும், பிற்பகல் போட்டிகள் இந்துஸ்தான் பொறியியல் மற்றும் கே பி ஆர் பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான நடைபெறும். இந்தப் போட்டிகள் இம்மாதம் 26ஆம் தேதி வரை அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும். இந்த கோப்பை ரோலிங் டிராபி, சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த பந்து வீச்சாளர், வளர்ந்து வரும் வீரர், மிகவும் மதிப்புமிக்க வீரர் மற்றும் போட்டியின் வீரர் ஆகியவற்றை அங்கீகரிக்கும்.

மேலும் படிக்க