• Download mobile app
19 Oct 2025, SundayEdition - 3539
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பகுதிநேர தூய்மைப்பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

May 13, 2022 தண்டோரா குழு

கோவையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பகுதிநேர தூய்மைப்பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளதாவது:

பகுதிநேர தூய்மைப்பணியாளர் ஆண்-11, பெண்-2, காலிப்பணியிடங்கள் நேர்காணல் மூலம் இனச்சுழற்சியின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்காக பின்வரும் தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 18 முதல் 35, பி.சி, பி.சி.எம், எம்.பி.சி, டி.என்.சி பிரிவினருக்கு 18 முதல் 32, இதர பிரிவினர் 18 முதல் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

மேற்படி தகுதிகளுடன் கோவை மாவட்டத்திலுள்ள விடுதிகளில் பகுதிநேர தூய்மைப்பணியாளராக தொகுப்பூதியம் அடிப்படையில் பணி புரிய விருப்பம் உள்ளவர்கள், ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாம் தளத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை நேரில் பெற்று அல்லது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய சான்றுகளின் நகல் இணைத்து இம்மாதம் 30ம் தேதி மாலை 5.45 மணிக்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை நேரிலோ தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் காலதாமதமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முகவரி தவறாக இருந்து, அழைப்பாணை திரும்ப பெறப்படும் விண்ணப்பங்கள் ஆகியவற்றின் மீது அரசு பரிசீலிக்காது எனவும் மனுதாரரே முழுப்பொறுப்பு எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றம் சிறுபான்மையினர் நல அலுவலக தொலைபேசி எண் 0422-2300404.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க