• Download mobile app
17 Jun 2026, WednesdayEdition - 3780
FLASH NEWS
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எஸ் பி வேலுமணி கோஷ்டி கூண்டோடு காலி – கோவை அதிமுகவில் செம வேலுச்சாமி தலைமையில் புதிய நிர்வாகிகள் தயார்

May 16, 2026 தண்டோரா குழு

அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் தலைமைக் கழகத்தின் எதிர்ப்பை மீறி தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு கொடுத்தனர்.இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி உள்கட்டமைப்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி நீக்கம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி நியமனம் செய்யப்பட்டார்.

கோவை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதி கழக வட்டக் கழக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பரிந்துரையின் பேரில் நியமனம் செய்யப்பட்டவர்களாக உள்ளனர். இவர்கள் மாவட்ட அலுவலகமான இதய தெய்வம் மாளிகையை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் கட்சிக்கு புத்துயிர் தரும் வகையில் எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்களை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை குறிப்பாக வட்டக் கழக, பகுதி கழக,வார்டு நிர்வாகிகளை நியமனம் செய்ய செ.ம.வேலுசாமி தீவிரம் காட்டி வருகிறார்.கோவை மாவட்டத்தில் கட்சிக்காக தொடர்ந்து வேலை செய்து வரும் இளைஞர்கள் மற்றும் திறன்மிக்கவர்களுக்கு பதவி வழங்க ஏற்பாடு நடக்கிறது.

எஸ்.பி.வேலுமணி தனது ஆதரவாளர்களுக்கு மட்டுமே பதவி வழங்கி வந்த நிலையில் கட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்காத பகுதி மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள் அதிரடியாக நீக்கம் செய்யப்பட உள்ளனர்.

விரைவில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவார்கள்.புதிய நிர்வாகிகள் பட்டியல் தயாராகி வருகிறது.விரைவில் எஸ்.பி.வேலுமணி தரப்பு நிர்வாகிகள் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டு புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.

மேலும் படிக்க