• Download mobile app
25 Oct 2025, SaturdayEdition - 3545
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஊரடங்கு காரணமாக வீட்டில் கொண்டாடப்பட்ட ரமலான் பண்டிகை !

May 25, 2020 தண்டோரா குழு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரமலான் பண்டிகை அவரவர் வீட்டில் கொண்டாடப்பட்டது.

வழக்கமாக ரமலான் பண்டிகையில் இஸ்லாமியர்கள் அனைவரும் புத்தாடைகள் அணிந்து பள்ளிவாசலுக்கு சென்று இறைவனை தொழுது ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொள்ளவர்.இனிப்புகளையும் உறவினர்கள்,அண்டை வீட்டார் அனைவருக்கும் வழங்கி மகிழ்வர்.ஆனால் தற்போது வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் கோவில்கள்,பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் போன்றவை திறக்க கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால் இஸ்லாமிய சகோதரர்கள் இந்த ஆண்டு ரமலான் பண்டிகையை புத்தாடைகள் அணியாமலும் பள்ளிவாசலுக்கு செல்லாமலும், இனிப்புகளை வழங்காமலும் வீட்டில் இருந்த படி இறைவனை தொழுதனர்.இது போன்ற ரமலான் பண்டிகையை இதுவரை கொண்டாடியதில்லை என்றும் இது போன்று உறவினர்கள் இல்லாமல் கொண்டாடுவது வருத்தமாக உள்ளதென்றும் தெரிவித்தனர். அதே சமயத்தில் மக்களின் நலனுக்காக இது போன்று கொண்டாடுவதில் தவறில்லை என்றும் தெரிவித்தனர்.

மேலும் படிக்க