• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சர்க்கரை வள்ளிக்கிழங்கு – பீட்ரூட் பரோட்டா

March 11, 2017 koodal.com

தேவையான பொருட்கள்:

சர்க்கரை வள்ளிக்கிழங்கு – 2.
பெரிய பீட்ரூட் – 1.
சோயா மாவு – 2 டேபிள் ஸ்பூன்.
கோதுமை மாவு – 1 கப்.
மஞ்சள் தூள் – 1\2 டீஸ்பூன்.
ஓமம், காய்ந்த மிளகாய்-தனியா இரண்டையும் வறுத்து அரைத்த பொடி – 1 டீஸ்பூன் .
பெருங்காயத்தூள் – 1\4 டீஸ்பூன்.
உப்பு – தேவையான அளவு.
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசிக்கவும்.பீட்ரூட்டைத் தோல் நீக்கி சீவிக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சோயா மாவு, மசித்த கிழங்கு, சீவிய பீட்ரூட், ஓமம், மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்-தனியாத்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து, சிறிது தண்­ணீர் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாகப் பிசையவும்.

இதை அரை மணி நேரம் ஊற விடவும்.மாவு மிருதுவாகி விடும்.இந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போல் இட்டு, சிறிது எண்ணெய் தடவி மடித்து, கொஞ்சம் கனமாக இடவும்.

தோசைக் கல்லில் சப்பாத்தியைப் போட்டு இருபக்கமும் பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும்.புதினா சட்னி (அ) வெள்ளரி-வெங்காயப் பச்சடியுடன் பரிமாறலாம்.

மேலும் படிக்க