• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பனீர் குல்சா

January 13, 2017 tamil.boldsky.com

தேவையான பொருள்கள்
சுத்திகரிக்கப்பட்ட மாவு – 3 கப்
சர்க்கரை – 1 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி
வெண்ணெய் – 5 ஸ்பூன்
பால் – 1 கப்
உப்பு

ஸ்டப்பிங்கிற்கு
பனீர் – 2௦௦ கிராம் (பிசைந்தது)
பச்சை மிளகாய் – 4 (நறுக்கியது)
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தலை – 2 டீஸ்பூன் (நறுக்கியது)
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
சாட் மசாலா – 2 தேக்கரண்டி
வெங்காயம் – 1 (நறுக்கியது)

செய்முறை
ஒரு பாத்திரம் எடுத்து அதில் மாவு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்க்கவும். அதன் பின்னர் இவை இரண்டையும் நன்கு கலக்கவும். இந்த மாவு கலவையை தனியே எடுத்து வைக்கவும்.

இப்போது ஒரு பால் ஜாடி எடுத்து அதில் பால், வெண்ணெய், சர்க்கரை, மற்றும் உப்பு சேர்க்கவும். அதன் பின்னர், அந்த கலவையை நன்றாக கலக்கவும்.

தனியே எடுத்து வைத்துள்ள மாவு கலவையில், இந்த பால் கலவையை ஊற்றி நன்கு பிசையவும். மாவு மிகவும் மென்மையாக வரும் வரை பிசையவும். பிறகு, பிசைந்தது வைத்த மாவை மென்மையான மெல்லிய ஈர துணி கொண்டு 40 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

காத்திருக்கும் நீரத்தில் நாம் ஸ்டப்பிங்கிற்கு தேவையான பொருள்களை தயார் செய்யலாம். ஒரு பெரிய கிண்ணத்தில் பிசைந்து வைத்த பனீர், வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு, கரம் மசாலா தூள், மிளகாய்த்தூள், மற்றும் சாட் மசாலா போன்றவையை சேர்க்கவும்.

பிறகு, அணைந்து பொருள்களையும் நன்கு கலக்கி அதை தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும். இப்பொழுது பனீர் குல்ச்சாவிற்கு தேவையான ஸ்டப்பிங் தயாராக உள்ளது.

ஒரு உருண்ட மாவை எடுத்து ஒரு தடித்த வட்டுவாக தேய்க்க வேண்டும். வட்டத்தை மிகப் பெரியதாக செய்ய வேண்டாம். இப்போது நீங்கள் தாயராக வைத்துள்ள ஸ்டப்பிங் பொருள்களை வட்டத்தின் நடுவில் வைத்து மாவை மூட வேண்டும்.

பிறகு, ஸ்டப்பிங் செய்துள்ள மாவை தேய்த்து வட்ட வட்டமாக மாற்றவும். இதில் மிக கவனமாக செயல்பட வேண்டும். ஏனெனில் ஸ்டப்பிங் செய்துள்ள பொருள்கள் வெளியே பிதுங்கி வராமல் கவனமாக தேய்க்க வேண்டும். இப்போது தோசைக் கல்லில் குல்ச்சவை வைத்து சுட வேண்டும்.
அடுப்பில் இருந்து குல்ச்சாவை எடுத்த பின்னர் அதன் மீது சிறிய வெண்ணெய் தடவ வேண்டும். இப்பொழுது சுவையான பனீர் குல்ச்சா தயார்.

http://tamil.boldsky.com/recipes/veg/paneer-kulcha-recipe/slider-pf78512-13537.html

மேலும் படிக்க