• Download mobile app
06 May 2026, WednesdayEdition - 3738
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாட்டுக்கோழி இஞ்சி வறுவல் ரெசிபி.!

December 22, 2017 tamil.samayam.com

தேவையான பொருட்கள்

நாட்டுக்கோழி கறி – 500 கிராம்
மிளகாய்த் தூள் – 3 தேக்கரண்டி
எண்ணெய் – 100 மில்லி
இஞ்சி சாறு – 100 கிராம்
மஞ்சள் தூள் – 3 தேக்கரண்டி
வினிகர் – ஒரு தேக்கரண்டி
உப்பு – சிறிதளவு
கறி மசாலா பொடி – சிறிது
கொத்தமல்லித் தழை – சிறிதளவு

செய்முறை

கோழி கறியைச் சுத்தமாக கழுவி தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைக்கவும்.இஞ்சியை தோல் சீவி அரைத்து சாறு பிழிந்து எடுத்து அதில் மஞ்சள் தூள், உப்பு, வினிகர், மிளகாய்த் தூள் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.அதனுடன் சுத்தம் செய்த கோழி கறியை போட்டு நன்றாக பிசையவும்.

பிறகு அதில் கறி மசாலா பொடியையும் சேர்த்து பிசறி ஒரு மணி நேரம் ஊற விடவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசறிய கோழிக் கறியை போட்டு வதக்கவும்,கறி வெந்து பொன்னிறமாக வதங்கியதும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.சுவையான நாட்டுக்கோழி இஞ்சி வறுவல் தயார்.

மேலும் படிக்க