• Download mobile app
23 Aug 2025, SaturdayEdition - 3482
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மட்டன் சமோஸா

September 17, 2018 awesomecuisine.com

தேவையான பொருட்கள்

மைதா – 350 கிராம்.

பேக்கிங் பௌடர் – 1/2 தேக்கரண்டி.

கொத்துக்கறி – 250 கிராம்.

பெரிய வெங்காயம் – 1.

மல்லித்தழை – 1/2 கப்.

புதினா இலை – 1/4 கப்.

இஞ்சி – 1 அங்குலம்.

பச்சை மிளகாய் – 4.

உப்புத் தூள் – தேவையான அளவு.

நெய் – 2 தேக்கரண்டி.

தயிர் – 1 தேக்கரண்டி.

தக்காளி – 1 பெரியது.

கரம் மசாலா – 1 தேக்கரண்டி.

செய்முறை

350 கிராம் மைதா மாவில் 1/2 தேக்கரண்டி பேக்கிங் பௌடரைக் கலந்து கொள்ளவும்.250 கிராம் கொத்துக்கறியை வாணலியில் போட்டு, தண்ணீர் இல்லாமல் வதக்கிக் கொள்ளவும்.

ஒரு பெரிய வெங்காயம், 1/2 கப் அளவு மல்லித்தழை, 1/4 கப் புதினா இலை, 1 அங்குலம் இஞ்சி, 4 பச்சை மிளகாய் ஆகியவற்றை மிகவும் சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.

மைதா, பேக்கிங் பௌடரைச் சலித்த பின் தேவையான உப்புத் தூள், 2 தேக்கரண்டி நெய், 1 தேக்கரண்டி தயிர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.

1/2 மணி நேரம் கழிந்த பின்னர் மறுபடியும் பிசைந்து சிறு உருண்டைகளாக செய்து கொள்ளவும்.

ஒரு பெரிய தக்காளியை 1/2 கப் தண்ணீரில் வேக வைத்து தோல் நீக்கி, இத்துடன் கரம் மசாலா 1 தேக்கரண்டி, மல்லித்தழை, புதினா இலையைக் கலந்து இறக்கிக் கொள்ளவும்.

கொத்துக்கறியுடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, தேவையான அளவு உப்புத்தூள் மற்றும் தக்காளிக் கலவையையும் கலந்து கொள்ளவும்.

மாவு உருண்டைகளைப் பூரிப் பலகையில் வட்டங்களாகத் தேய்த்து ஒவ்வொரு வட்டத்தையும் 1/2 வட்டமாக செய்து அதை கோன் (cone) வடிவமாக அமைத்து, இதனுள் கொத்துக்கறி கலவையை வைத்து மூடவும். 1/2 மணி நேரம் அப்படியே வைக்கவும்.

அதன்பின் வாணலியில் 2 கப் சமையல் எண்ணெய் ஊற்றி காய வைத்தக் கோன்களைப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.சட்னியுடன் பரிமாறலாம்.

மேலும் படிக்க