• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொள்ளு துவையல்

December 1, 2017 tamil.webdunia.com

தேவையான பொருட்கள் :

கொள்ளு – கால் கப்
மிளகாய் வத்தல் – 3
உளுந்து – 2 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்
புளி – சிறு துண்டு
பூண்டு – 2 பல்
தேவையான உப்பு

செய்முறை:

கால் கப் கொள்ளை எடுத்து கொண்டு கடாயை சூடாக்கி அதில் கொள்ளைப் போட்டு நன்றாக மொறுமொறுப்பாக, வாசனை வரும் வரைக்கும் வறுத்து கொள்ள வேண்டும்.

அதே கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெயை காய்ந்ததும் மிளகாய் வத்தல், உளுந்து ரெண்டையும் போட்டு வறுத்தெடுத்துக் கொள்ளவும். பிறகு வறுத்த மிளகாய், உளுந்து, கொள்ளு எல்லாம் சூடு ஆறியதும், தேங்காய்த் துருவல், சிறு துண்டு புளி, பூண்டு, தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்துக் சிறிதளவு தண்ணிவிட்டுக் கரகரப்பா அரைக்கவும். அவ்வளவு இந்த கொள்ளு, துவையல் ருசி அருமையாக இருக்கும்.

மேலும் படிக்க