• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜவ்வரிசி வடை

March 16, 2017 tamil.boldsky.com

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி – 3/4 கப்.

உருளைக்கிழங்கு – 1 (வேக வைத்து, துண்டுகளாக்கப்பட்டது).

வறுத்த வேர்க்கடலை – 1/4 கப்.

பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது).

இஞ்சி – 1 டீஸ்பூன் (துருவியது).

கொத்தமல்லி – சிறிது.

உப்பு – தேவையான அளவு .

எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன் (விருப்பமிருந்தால்)

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் ஜவ்வரிசியை எடுத்து, அதில் தண்ணீர் ஊற்றி, 3-4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் வறுத்த வேர்க்கடலையை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் ஊற வைத்த ஜவ்வரிசியைப் போட்டு, அத்துடன் உருளைக்கிழங்கை மசித்து சேர்த்து, நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.

ஒருவேளை கலவையில் நீர் அதிகம் இருந்தால், அத்துடன் அரிசி மாவை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ளதை சிறு உருண்டைகளாக எடுத்து வடைப் போன்று தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

மேலும் படிக்க