• Download mobile app
14 Oct 2025, TuesdayEdition - 3534
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செட்டிநாட்டு கந்தரப்பம்

November 1, 2017

தேவையான பொருட்கள்:

பச்சரிசி – 1 கப்
புழுங்கல் அரிசி – 1/2 கப்
உளுந்து – 2 மேஜைக்கரண்டி
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
ஏலக்காய் – 3
தேங்காய் துருவியது – 1 மேஜைக்கரண்டி
எண்ணெய் – பொரித்தெடுக்க தேவையான அளவு
வெல்லம் – 1 கப் பொடித்தது

செய்முறை:

அரிசி மற்றும் பருப்பை நன்கு கழுவி வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் வரை ஊரவைக்கவும். பின்பு நீரை வடித்துவிட்டு மிருதுவாக அரைக்கவும், ஏலக்காய், தேங்காய் மற்றும் வெல்லப்பொடி சேர்த்து 2 நிமிடம் அரைத்தெடுக்கவும். அரைத்த மாவை 1 வரம் வரை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.

கடாயில் எண்ணெய் காய வைக்கவும். காய்ந்த பின் 1 கரண்டி அளவு மாவை எடுத்து காய்ந்த எண்ணெயின் நடுவில் மெதுவாக உற்றவும். ஓரங்களில் வெந்த பின், திருப்பி விட்டு 1/2 நிமிடத்தில் எடுக்கவும். இது போன்று மீதமுள்ள மாவையும் ஒன்றொன்றாக சுட்டு எடுக்கவும். சுவையான செட்டிநாட்டு சிறப்பு கந்தரப்பம் தயார்.

மேலும் படிக்க