• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாதுஷா ஸ்பெஷல்

September 1, 2017 tamil.webdunia.com

தேவையானபொருட்கள்:

மைதா – 1 1/2 கப்
வெண்ணெய் – 1/2 கப்
சர்க்கரை – 1/4 ஸ்பூன்
பேக்கிங் சோடா – 1/4 ஸ்பூன்
தயிர் – 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க

பாகு செய்ய:

சர்க்கரை – 1/2 கப்
தண்ணீர் – 1/2 கப்
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்

செய்முறை

மைதா, பேக்கிங் சோடாவை கலந்து சலித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் உருக்கிய வெண்ணெய், தயிர், சர்க்கரை அனைத்தையும் ஒன்றாக நன்கு கலக்கவும்.அதனுடன் சிறிது சிறிதாக மைதா மாவை சேர்க்கவும்.

மாவை மிருதுவாக கெட்டியாக பிசையவும்.தேவைப்பட்டால் மட்டும் சிறிது நீர் தெளித்துக் கெட்டியாக பிசையவும். குறைந்தது 15 நிமிடம் வரை மாவை நன்கு கைகளால் மிருதுவாக பிசையவும்.

பின் நடுத்தர உருண்டையாக எடுத்து ஒரத்தில் மடித்து விடவும் அல்லது வடைபோல் தட்டில் கட்டை விரலால் குழிபோல் செய்யவும். கடாயில் எண்ணெயை காயவைக்கவும். மாவை சிறிது கிள்ளிபோட்டால் மாவு மேலே எழும்பி வரும்போது, எண்ணெய் பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி பாதுஷாக்களைப் போடவும்.

பாதுஷா மேலே எழம்பி வரும்போது மீண்டும்கடாயை அடுப்பில் வைத்து சிறுதீயில் வைத்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். இன்னொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் வைத்து பிசுபிசுப்பு பதம் வரும்போது எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும். பொரித்த பாதுஷாக்களை சூடான சர்க்கரை பாகில் 2 நிமிடங்கள் போட்டு எடுக்கவும். சுவையான பாதுஷா தயார்.

மேலும் படிக்க