• Download mobile app
14 Oct 2025, TuesdayEdition - 3534
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பன்னீர் கோபி கோஃப்தா கறி

July 4, 2017 awesomecuisine.com

தேவையான பொருட்கள்

காளிஃப்ளவர் – கால் கப் (முக்கால் வேக்காடு வேகவைத்தது)

உருளைக்கிழங்கு – கால் கப் (வேகவைத்தது)

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்

மிளகு தூள் – அரை டீஸ்பூன்

கரம் மசாலா – அரை டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

பன்னீர் – கால் கப் (பொடியாக நறுக்கியது)

மைதா மாவு – சிறிதளவு

க்ரேவி செய்ய:

எண்ணெய் – தேவையான அளவு

தக்காளி விழுது – அரை கப்

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

மிளகாய் தூள் – ஒன்றை டீஸ்பூன்

கரம் மசாலா – அரை டீஸ்பூன்

இஞ்சி, பூண்டு விழுது – அரை டீஸ்பூன்

ப்ரெஷ் க்ரீம் – இரண்டு டீஸ்பூன்

பால் – அரை டம்ளர் (காய்ச்சிய பால்)

கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை

ஒரு கிண்ணத்தில் வேகவைத்த காளிஃபிளவர், வேகவைத்த உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மிளகு தூள், உப்பு சிறிதளவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

பிறகு, அதில் பன்னீர் துண்டு சேர்த்து கலந்து கொள்ளவும்.

சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, மைதா மாவில் புரட்டி, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும்.

இன்னொரு கடாயில் எண்ணெய் மூன்று டீஸ்பூன் ஊற்றி காய்ந்ததும், தக்காளி விழுது, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து கலந்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, க்ரீம் சேர்த்து கலந்து, இரண்டு நிமிடம் கழித்து பால் சேர்த்து கொதிக்கவிட்டு க்ரேவி போல் வந்தவுடன் பொரித்த உருண்டை சேர்த்து மூன்று நிமிடம் கழித்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

மேலும் படிக்க