• Download mobile app
25 Jun 2026, ThursdayEdition - 3788
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுவை மிகுந்த ஆனியன் சமோசா செய்ய….!

January 28, 2019 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – 1 கப்
மைதா – 1 கப்
எண்ணெய் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
வெங்காயம் – 4
அவல் – 1 கப்
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 3
கொத்தமல்லி – தேவையான அளவு
எலுமிச்சை – 1
செய்முறை:

மைதா, கோதுமை, உப்பு, எண்ணெய் சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும். 15 நிமிடம் ஊறவிடவும்.

ஒரு பாத்திரத்தில் வெங்காயம், அவல், மிளகாய் தூள், சீரகப் பொடி, நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும்.

சமோசா மாவை சப்பாத்தி போல் மெல்லியதாக திரட்டி கொள்ளவும். தோசை கல்லில் போட்டு ஒரு பக்கம் மட்டும் சூடுபத்தினால் போதுமானது. மைதாவில் சிறிது தண்ணீர்விட்டு பசைபோல் செய்து கொள்ளவும்.

சூடுபடுத்திய சப்பாத்தியை நீளவாக்கில் கட் செய்து பசையை தடவி முக்கோணமாக மடித்து கொண்டு, செய்து வைத்திருந்த வெங்காய கலவையை நிரப்பி பசையை தடவி மூடிவிடவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தயாராக வைத்துள்ள சமோசாவை பொறித்து எடுக்கவும். சுவையான ஆனியன் சமோசா தயார்.

மேலும் படிக்க