• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிக்கன் -தேன் சூப்

September 27, 2017 tamil.boldsky.com

தேவையான பொருட்கள்:

சிக்கன் பீஸ் – ½ கப்
இஞ்சி மற்றும் பூண்டு – 1 டீ ஸ்பூன் (நறுக்கப்பட்டது)
கேரட், ஸ்வீட் கார்ன், பட்டாணி – ½ கப் (நறுக்கப்பட்டது)
மஞ்சள் தூள் – ¼ டீ ஸ்பூன்
கொத்துமல்லி தழை – 2 டீ ஸ்பூன் (நறுக்கப்பட்டது)
சால்ட் – சுவைக்கு ஏற்ப அளவு
பெப்பர் – சுவைக்கு ஏற்ப
தண்ணீர் – 3 கப்
தேன் – 2 லிருந்து 3 டீ ஸ்பூன்

செய்முறை:

ஒரு பானையை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் சிக்கன், கேரட், பட்டாணி, ஸ்வீட் கார்ன் ஆகியவற்றை சேர்த்து கொள்ளுங்கள்.அத்துடன் தண்ணீரையும் சேர்த்து கொள்ளுங்கள்.மஞ்சள், பெப்பர் மற்றும் சால்டையும் அத்துடன் சேர்த்து கொள்ளுங்கள்.

இப்பொழுது பானையிலிருக்கும் அனைத்தையும் கொதிக்க வையுங்கள். 5.சிக்கன் அரை நிலையில் வேகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். 6.இப்பொழுது, கொத்துமல்லி தழைகளை அதில் தூவி…பானையை மூட வேண்டும்.

சிக்கன் முழுவதுமாக வேகும் வரை காத்திருக்க வேண்டும்.ஒரு போதும் ஓவர்குக் ஆகும் அளவிற்கோ அல்லது சிக்கன் சவசவ எனவும், மற்றும் ரப்பர் போல் (கடிக்க கடினம்) ஆகும் அளவிற்கோ விட்டுவிடாதீர்கள்.இப்பொழுது பௌலில் சூப்பை கொட்ட வேண்டும்.

அதில் இரண்டு டீ ஸ்பூன் தேனை சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.மறுபடியும் ப்ரஸ் கொத்துமல்லி இலைகளை கொண்டு சூப்பை அழகுபடுத்தவும் (மேலே தூவ)அதனை சுட சுட எடுத்து…ப்ரட் அல்லது கார்லிக் ப்ரட் ஸ்டிக்குகளுடனோ சேர்ந்து டேஸ்ட் செய்ய… எல்லையில்லா ஆனந்தத்தில் நீங்கள் மூழ்வீர்கள் என்பதில் எந்த ஒரு ஆச்சரியமும் வேண்டாம்.

மேலும் படிக்க