• Download mobile app
08 May 2024, WednesdayEdition - 3010
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சர்க்கரைவள்ளிக்கிழங்கு பாயசம்

March 28, 2018 tamil.boldsky.com

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி – 3 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை வள்ளிக் கிழங்கு – 1

முந்திரி பருப்பு (தோல் நீக்கியது) – 1டேபிள் ஸ்பூன்

பாதாம் பருப்பு (தோல் நீக்கியது) – 1 டேபிள் ஸ்பூன்

பால் – 3 கப்

ஏலக்காய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஒரு பெளலை எடுத்து அதில் ஜவ்வரிசியை எடுத்து கொள்ளவும் அதில் தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.ஒரு குக்கரை எடுத்து அதில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை பாதியாக வெட்டி வைக்கவும் அதில் தண்ணீர் சேர்த்து 3-4 விசில் அடிக்கும் வரை வேக வைக்கவும்.

வேக வைத்த கிழங்கின் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பால் சேர்க்கவும்.3-5 நிமிடங்கள் பாலை நன்றாகக் கொதிக்க விட்டு அதில் ஜவ்வரிசி சேர்க்கவும்.

நன்றாக கலக்கி குறைந்த தீயில் 4-5 நிமிடங்கள் பாலை வைத்திருக்க வேண்டும்.அதனுடன் சர்க்கரை,முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இவற்றைச் சேர்த்து நன்றாக கிளறி 2 நிமிடங்கள் சமைக்கவும்.வேக வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக கிளறவும்.

பிறகு குங்குமப் பூ,ஏலக்காய் சேர்த்து நன்றாக கிளறவும் அடுப்பை அணைத்து விட்டு ஒரு பெளலிற்கு மாற்றி கொள்ளுங்கள்.அப்படியே பாதாம் பருப்பை அதன் மேல் தூவி அலங்கரித்து சூடாக அல்லது ஆறின பிறகு பரிமாறுங்கள். சுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு கீர் ரெசிபி ரெடி.

 

மேலும் படிக்க