• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் எள் நூடுல்ஸ்

July 3, 2017 tamilboldsky.com

தேவையான பொருட்கள்:

வேகவைத்த நூடுல்ஸ் – 2½ கப்
பூண்டு – 1 டீஸ்பூன் (நறுக்கியது)
வெள்ளை எள் – 1 டீஸ்பூன்
இஞ்சி – 1 டீஸ்பூன் (நறுக்கியது)
வினிகர் – 1 தேக்கரண்டி
கருப்பு சோயா சாஸ்- 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்
வெங்காயத்தாள் – 1 டீஸ்பூன் (நறுக்கியது)
உப்பு – தேவைக்கு ஏற்றபடி

எப்படி செய்வது ?

எள்ளை மிதமான சூட்டில் குறைந்தது இரண்டு நிமிடங்கள் வறுக்கவும். அதன் பின்னர் அதை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்

இப்போது, அடுப்பில் ஒரு பான் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதனுடன் இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுக்கவும்.

அதன் பின்னர் இதனுடன் வேக வைத்த நூடுல்ஸை சேர்க்கவும். அதனுடன் சிறிது உப்பு, கருப்பு சோயா சாஸ் மற்றும் சிறிது வினிகர் சேர்க்கவும்.

கலவையை நன்கு கலக்க அவற்றை சிறிது பிரட்டி விடவும். பின்னர் நூடுல்ஸ் மீது வறுத்த எள் தூவவும்.

இப்போது, எள், நூடுல்ஸில் நன்கு கலக்கும் வண்ணம் கலவையை மீண்டும் பிரட்டி விடவும். கலவை நன்கு கலந்த பின் அடுப்பை அனைத்து விடவும்.

நூடுல்ஸை ஒரு பரிமாறும் கிண்ணத்திற்கு மாற்றி விடவும்.

நறுக்கப்பட்ட வெங்காயத் தாள் மற்றும் மீதமுள்ள எள்ளை, நூடுல்ஸ் மீது தூவி அலங்கரிக்கவும்.

இப்பொழுது உங்களின் சுவை மிகுந்த எள் நூடுல்ஸ் பறிமாறத் தயாராக உள்ளது.

உங்கள் குழந்தைகள் காரம் இல்லாத உணவை உட்கொள்ள விரும்பினால் இது அவர்களுக்கேற்ற மிகவும் சரியான உணவு. சுவை மிகுந்த இது, மிகவும் ஆரோக்கியமானதும் கூட. இதை நீங்கள் மேழும் சிறப்பிக்க விரும்பினால் இதனுடன் வேக வைத்த காய்கறிகள், முட்டை, மற்றும் சிக்கன் ஆகியவற்றை சேர்க்கலாம்.

மேலும் படிக்க