• Download mobile app
09 May 2024, ThursdayEdition - 3011
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கடாய் சிக்கன் ரெசிபி!

February 13, 2018 tamilsamayam.com

தேவையான பொருட்கள்!

சிக்கன் – அரை கிலோ,

பெரிய வெங்காயம் – 100 கிராம்,

தக்காளி – 100 கிராம்,

இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன்,

பச்சை மிளகாய் (கீறியது) – 4,

கசூரி மேத்தி (காய்ந்த வெந்தயக்கீரை) – கால் டீஸ்பூன்,

காய்ந்த மிளகாய் – 10 கிராம்,

முழுமல்லி (தனியா) – 20 கிராம்,

குடமிளகாய் – ஒன்று,

பெரிய வெங்காயம் (இதழ்களாக நறுக்கியது) – ஒன்று,

கொத்தமல்லித்தழை (பொடியாக நறுக்கியது) – சிறிதளவு,

கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்,

எண்ணெய் – 50 மில்லி,

உப்பு – தேவையான அளவு.

செய்முறை!

அடுப்பில் வாணலி வைத்துச் சூடானதும் எண்ணெய் விடாமல், காய்ந்த மிளகாய் மற்றும் முழுமல்லி (தனியா) சேர்த்து வறுத்து எடுத்து ஆறவைத்து பொடியாக அரைத்துக்கொள்ளவும். தக்காளியை வெண்ணீரில் சேர்த்து, தோலுரித்து, தண்ணீர் சேர்க்காமல் விழுதாக அரைக்கவும்.

அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் வெங்காய விழுது, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு அதில் தக்காளி விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்கு வதக்கவும்.

இதனுடன் கசூரி மேத்தி, கீறிய பச்சைமிளகாய், அரைத்த காய்ந்த மிளகாய் – முழுமல்லி பொடி, உப்பு, சிக்கன் சேர்த்து நன்கு கிளறிவிட்டு, தேவைப்பட்டால் சிறிது தண்ணிர் சேர்த்து வேகவிடவும். பின்பு இதனுடன் கரம் மசாலாத்தூள் சேர்த்து கலக்கிவிடவும்.

அடுப்பில் மற்றொரு வாணலி வைத்து சிறிது எண்ணெய் சேர்த்துச் சூடானதும் இதழ்களாக நறுக்கிய வெங்காயம் மற்றும் குடமிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

அதை சிக்கன் கிரேவியுடன் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

கொத்தமல்லித்தழை தூவி, கடாய் சிக்கனை சூடாகப் பரிமாறவும். கடாய் சிக்கன், சப்பாத்திக்கு மிகவும் சுவையாக இருக்கும்

மேலும் படிக்க