• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உருளைக்கிழங்கு கட்லெட்

May 5, 2018 tamilsamyam.com

தேவையான பொருட்கள்:

கார்ன்ஃப்ளார் (சோள மாவு) ஒரு கப்

ரஸ்க் தூள்- 6 டேபிள்ஸ்பூன்.

உருளைக்கிழங்கு- 200 கிராம்.

கேரட் துருவல்- 6 டேபிள்ஸ்பூன்.

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 3 டேபிள்ஸ்பூன்.

கொத்தமல்லித் தழை 2 டேபிள்ஸ்பூன்.

பெரிய வெங்காயம் ஒன்று.

மஞ்சள்தூள் ஒரு டீஸ்பூன்.

உப்பு, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

உருளைக்கிழங்கை நான்காக நறுக்கி மஞ்சள்தூள்,சிறிதளவு உப்பு சேர்த்து வேகவிடவும்.வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி,கேரட் துருவல் சேர்த்து வதக்கவும்.

பின்னர் வேகவைத்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி சேர்த்து மேலும் வதக்கி,கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.ஆறியதும் நீளவாக்கில் உருட்டி வைக்கவும்.கான்ஃப்ளார் மாவில் சிறிதளவு உப்பு சேர்த்து, நீர் விட்டு கெட்டியாக கரைத்து, உருட்டி வைத்த கலவையை அதில் தோய்த்து, ரஸ்க் தூளில் புரட்டி எடுக்கவும்.சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.சுவையான உருளைக்கிழங்கு கட்லெட் தயார்.

மேலும் படிக்க