• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அஞ்சப்பர் சிக்கன் கறி

April 3, 2017 kayalsamayal.com

தேவையான பொருட்கள் :

– சிக்கன் அரை கிலோ
– தக்காளி – 3
– மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி
– முந்திரி பருப்பு – 1௦

அரைக்க :

– வெங்காயம் – 3-4
– மிளகு, சீரகம் – தலா ஒரு மேஜை கரண்டி
– பாதம் – 4
– பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2
– தயிர் – ½ கப்

மேலே சொன்ன பொருட்களை எல்லாம் ஒன்றாக தயிருடன் கலந்து மிக்சியில் அரைக்கவும்.

தாளிக்க :

– மிளகு, சீரகம் – தலா ஒரு மேஜை கரண்டி
– பூண்டு – 4 பல்
– காயிந்த வத்தல் – 2
– கருவேப்பிலை – ஒரு கொத்து
– எண்ணெய் – தேவையான அளவு
– உப்பு – தேவையான அளவு

செய்முறை :

சிக்கனை நன்றாக அலசி மஞ்சள்தூள், உப்பு போட்டு ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு தயிர் கலவையுடன் சிக்கனை கலந்து வேக வைக்கவும்.

மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி முந்திரி பருப்பிணை பொன்னிறமாக பொறித்து எடுத்து தனியாக வைக்கவும். அதே எண்ணெயில் சீரகம், முழு மிளகு, கருவேப்பிலை, காய்ந்த வத்தல், பூண்டு பல் சேர்த்து தாளிக்கவும்.

பிறகு, நறுக்கிய தக்காளி, மிளகாய்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். வதங்கிய பின், சிக்கன் கலவை சேர்த்து வேக வைக்கவும். மேலே பொறித்த முந்திரி பருப்பினை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

சுவையான அஞ்சப்பர் சிக்கன் கறி தயார்!!

மேலும் படிக்க