• Download mobile app
27 Jul 2024, SaturdayEdition - 3090
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மட்டன் உருளைக் கிழங்கு போண்டா செய்ய…!

May 20, 2019 tamil.webdunia.com

தேவையான பொருள்கள்:

கொத்து கறி – கால் கிலோ
காய்ந்த மிளகாய் – 5
சோம்பு – அரை ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
தனியா – 3 ஸ்பூன்
நெய் – 3 ஸ்பூன்
பட்டை 1 துண்டு
கிராம்பு 1
பச்சை மிளகாய் 1
உருளைக் கிழங்கு – அரை கிலோ
நறுக்கிய வெங்காயம் – 2
முட்டை – 2
மஞ்சள் பொடி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:

காய்ந்த மிளகாய், விட்டுபட்டை,கிராம்பு, சோம்பு, தனியா, சீரகம் இவற்றை வறுத்து நன்கு அரைத்து கொள்ளவும். கொத்துகறியில் அரைத்த விழுது, உப்பு, மஞ்சள் பொடி, சேர்த்து நன்கு வதக்கி அதில் உள்ள நீர் சுண்டியதும் இறக்கி வைக்கவும்.

கடாயில் நெய், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் துண்டுகள் போட்டு தாளித்து கறியையும் கொட்டி கிளறி அதனுடன் வேகவைத்து உருளைகிழங்கு தேவையான அளவு உப்பு போட்டு நன்கு மசித்து சின்ன உருண்டைகளாக செய்யவும்.

ஒரு கிண்ணத்தில் முட்டைகளின் வெள்ளை கருவை மட்டும் தனியே எடுத்து அடித்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், உருண்டைகளை வெள்ளை கருவில் முக்கி, பொரித்து எடுத்தால் மட்டன் உருளைக்கிழங்கு போண்டா தயார்.

மேலும் படிக்க