• Download mobile app
09 Jun 2023, FridayEdition - 2676
FLASH NEWS
  • அதிமுக பொதுக்குழு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு – ஓ.பி.எஸ் அறிவிப்பு
  • தமிழகத்தில் 10 முதல் 11 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது-அமைச்சர் செந்தில் பாலாஜி
  • அக்னிபாத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஜூன் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!
  • தமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்
  • 14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு
  • 12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு!
  • 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • “பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்!” – முதலமைச்சர் ஸ்டாலின்
  • ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்
  • 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு !

சுவையான காலிப்பிளவர் சூப் செய்ய…!!

https://tamil.webdunia.com/
February 10, 2020

தேவையான பொருட்கள்:

காலிப்பிளவர் – 1
பாசிப்பருப்பு – 200 கிராம்
வெங்காயம் – 250 கிராம்
தக்காளி – 250 கிராம்
பச்சை மிளகாய் – 10
சீரகத்தூள் – 1/2 ஸ்பூன்
சோம்புத்தூள் – 1/2 ஸ்பூன்
மஞ்சத்தூள் – 1/4 ஸ்பூன்
சீரகம் – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவைக்கு

தாளிக்க தேவையான பொருட்கள்:

வரமிளகாய் – 5
பட்டை, இலை, மிளகு – சிறிது
எண்ணெய் – தேவைக்கு
கறிவேப்பிலை, கொத்தமல்லி – தேவையான அளவு

செய்முறை:

ஒரு அகலமான பாத்திரத்தில் பசிப்பருப்பை போட்டு ஒரு லிட்டர் அளவிற்க்கு தண்ணீர் ஊற்றி மஞ்சத்தூள், சீரகம், ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.

பருப்பு ஒரு கொதி வந்ததும் சிறிது நேரத்தில் வெங்காயம், தக்காளி, ப.மிள்காய் இவை அனைத்தையும் போட்டு நன்கு வேக விடவும். பருப்புடன் வெங்காயம், தக்காளி சேர்ந்து நன்கு வெந்ததும் அதில் காலிப்பிளவரைச் (காலிப்பிளவரை நறுக்கி சுத்தம் செய்து கொள்ளவும்) சேர்த்து நன்கு வேக விடவும்.

காலிப்பிளவர் வெந்ததும் தேவையான உப்பு, சீரகத்தூள், சோம்புத்தூள் போட்டு நன்கு கொதி வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும். வேறு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, இலை, மிளகு, வரமிளகாய், கறிவேப்பிலை போட்டு தாள்ளித்து சூப்பில் கொட்டி ஒரு கொதிவிட்டு இறக்கி கொத்தமல்லி தூவினால் சுவையான காலிப்பிளவர் சூப் தயார்.

மேலும் படிக்க