• Download mobile app
06 Mar 2026, FridayEdition - 3677
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிக்கன் தோசை செய்ய…!

April 15, 2019 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

1. சிக்கன் கொத்துக்கறி – 200 கிராம்
2. சின்ன வெங்காயம் – 10
3. தக்காளி – 1
4. இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
5. மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
6. மிள்காய் தூள் – 2 டீஸ்பூன்
7. பச்சைமிளகாய் – 1
8. கரம்மசாலாத்தூள் – 1 சிட்டிகை
9. எண்ணெய், உப்பு – தேவைக்கு
10.முட்டை – 1
11.தோசை மாவு – 1 கப்
செய்முறை:

கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது, தக்காளியை வதக்கி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், சேர்த்து வதக்கவும் பின்பு கொத்துக்கறியை போட்டு வதக்கி உப்பு தண்ணீர் சேர்த்து வேகவிட்டு சுருண்டு வந்ததும் இறக்கவும்.

தோசைக்கல்லை காயவைத்து மாவை கனமான தோசையாக வார்த்து அதன் மேல் கொத்துக்கறி கலவையை பரப்பி அதன் மேல் முட்டையை அடித்து ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும். சுவையான சிக்கன் தோசை தயார்.

மேலும் படிக்க