• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விவசாயிகள் வறட்சியால் தற்கொலை செய்யவில்லை – தமிழக அரசு

April 28, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் விவசாயிகள் மரணம் குறித்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் பிராமணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், வறட்சி காரணமாக தமிழக விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. 30 விவசாயிகள் தங்களது குடும்பப் பிரச்னைகளால் தற்கொலை செய்து கொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழந்த மற்ற விவசாயிகள் உடல்நலக்குறைவு, வயது முதிர்ச்சி உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்தனர் என்றும் உயிரிழந்த விவசாய குடும்பத்தினருக்கு தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் ரூபாய் வீதம் ரூ.2.46 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்திய நிலையில் தமிழக அரசின் இந்தத் பிரமாணப்பத்திரம் தாக்கல் குறித்து தென்னக நிதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணு உள்ளிட்ட விவசாய சங்கத்தினரின் பலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க