• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மாணவி அனிதா தூக்கிட்டு தற்கொலை

September 1, 2017 தண்டோரா குழு

நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மாணவி அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூரில் சேர்ந்த கூலி தொழிலாளியின் மகள் மாணவி அனிதா.பிளஸ் 2-வில் 1200-க்கு 1176 மதிப்பெண் பெற்றவர். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் அனிதாவின் கட்ஆஃப் மதிப்பெண் 196.5 ஆகும். எனினும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தகுதி தேர்வில் அவர் 86 மதிப்பெண்களே பெற்றிருந்தார். இதனால் அவரது மருத்துவராகும் கனவு பாழாகியது.

இதனைத்தொடர்ந்து, மாணவி அனிதா, நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.நீதிமன்றத்திற்கு சென்று நீதி கிடைக்கும் என காத்திருந்தார். ஆனால்,கடைசி வரை போராடியும் நீட் தேர்வு முடிவின் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துவிட்டது. இதனால் கடந்த சில நாட்களாக விரக்தியின் உச்சத்தில் இருந்த மாணவி அனிதா,இன்று திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசின் பொறுப்பின்மையும், மத்திய அரசு முதலில் ஓராண்டு நீட்டிலிருந்து விலக்கு அளிக்க தயார் என கூறி கடைசி நேரத்தில் தமிழகத்திற்கு மட்டும் நீட்டிலிருந்து விலக்கு அளிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் கூறியதும் தமிழகத்தில் பல மாணவர்களின் மருத்துவராகும் கனவை சிதைத்துவிட்டது என்றே கூறலாம்.

இந்நிலையில் நீட் தேர்வை எதிர்த்து சட்ட ரீதியாக போராடிய மாணவி அனிதா, தற்கொலை செய்து கொண்டது அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க