• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஸ்வரூபம்-2 நடிகர் கமல்ஹாசனுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

August 3, 2018 தண்டோரா குழு

விஸ்வரூபம்-2 படத்திற்கு தடை கோரிய வழக்கில் நடிகர் கமல்ஹாசனுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கமலஹாசனின் விஸ்வரூபம்-2 படத்திற்கு தடை கோரி பிரமீட் சாய் மீரா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விஸ்வரூபம் 2’ படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.இப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி தமிழ்,இந்தி,தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்திற்கு தடைக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமீட் சாய் மீரா நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.இதனையடுத்து பிரமீட் சாய் மீரா நிறுவனம் தொடுத்த வழக்கில் கமல்ஹாசன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் வரும் 6ம் தேதி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க