• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீண்டும் இணையும் விஜய்சேதுபதி ஐஸ்வர்யா ராஜேஷ் காம்பினேஷன்

May 14, 2018 தண்டோரா குழு

மணிரத்னத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் “செக்கச்சிவந்த வானம்” முக்கிய பிரபலங்கள் இதில் நடித்து வருன்கின்றனர் இப் படத்தில் மீண்டும் விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர்களது கெமிஸ்ட்ரி மிகவும் நல்லா இருப்பதாக ரசிகர்கள் பாராட்டியும் உள்ளனர் மீண்டும் இந்த ஜோடியை படத்தில் எப்போது பார்க்கலாம் என சினிமா ரசிகர்கள் காத்துக்கிடந்தனர்.

ரசிகர்களை மகிழ்ச்சியூட்டும் விதமாக இந்த ஜோடி தற்போது மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகி வரும் “செக்கச்சிவந்த வானம்” படத்தில் இணைந்து நடிக்கவுள்ளது.

இந்த படத்தில் அரவிந்த்சாமி மற்றும் விஜய் சேதுதி காம்பினேஷனில் ஐஸ்வர்யா ராஜேஷ் சில காட்சிகளில் நடிக்கவுள்ளார் மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து விட்டதாக மகிழ்ச்சியுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார் மேலும் வாய்ப்பு கிடைத்தால் தொடர்ந்து அவருடன் நடிப்பேன் என்று புன்னைகையுடன் கூறினார்.

ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை போன்ற படங்களில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார் .

மேலும் படிக்க