• Download mobile app
19 May 2026, TuesdayEdition - 3751
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நெஞ்சை தொட்டது! அனுபவித்து பார்க்க வேண்டிய படம் 96 – இயக்குநர் சேரன்

October 8, 2018 தண்டோரா குழு

இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி,த்ரிஷா நடித்த படம் 96.நந்தகோபால் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.கடந்த 4ம் தேதி வெளியான இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இந்நிலையில்,இந்த படத்தை பார்த்த இயக்குநர் சேரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில்,

“96 படம் பார்த்தேன்.நெஞ்சை தொட்டது.. எல்லாரும் சொல்றாங்க அது ‘ஆட்டோகிராஃப்’ போலனு.. இல்ல அது வேற இது வேற.. அது கடந்து வந்த காதல்களை நினைத்து பார்த்து காதலையும் தாண்டி இந்த உலகில் நாம் வாழ நிறைய அத்தியாவசியங்கள் இருக்குனு சொன்ன படம்.‘96’ ஒரு அழகான கவிதை.தங்கள் காதலை தொலைத்த இருவர் 20 வருடங்களுக்கு பின் சந்திக்கும் போது இருவரின் தவிப்பு உணர்வு அழுத்தம் பாசம் ஏமாற்றம் ஆற்றாமை தோல்வியின் வலி என இருவருக்கும் இடையிலான பல்வேறு உணர்வுகளை அழகாக பதிவு செய்திருக்கும் சிறந்த படம்.விஜய் சேதுபதியும்,த்ரிஷாவும் மிக சிறப்பாக நடிச்சுருக்காங்க. இயக்குநருக்கு வாழ்த்துக்கள்.அனுபவித்து பார்க்க வேண்டிய படம்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க