• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தெலுங்கு மெகா ஸ்டாருடன் இணையும் விஜய் சேதுபதி!

December 6, 2017 தண்டோரா குழு

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் இணைந்து ‘சைரா’ படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஜய் சேதுபதி. அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் வெற்றி பெறுகின்றன.

இவர் திரைப்பயணத்தில் மிக முக்கிய படமாக ‘சைரா’ அமையவுள்ளது. ஆம், ரூ 200 கோடி பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் இப்படத்தில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். மேலும் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் சுதீப்பும் நடிக்கிறார். இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிகர் விஜய் சேதுபதியும் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நாளை பிரமாண்டமாக ஐதராபாத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்படம் தான் அடுத்த வருடம் இந்திய ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படமாக இருக்கும் என்று தெரிகின்றது.

மேலும் படிக்க