• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘சைக்கோ’

September 4, 2018 தண்டோரா குழு

உதயநிதி ஸ்டாலின் தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் ‘கண்ணே கலைமானே’ படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதனைத்தொடர்ந்து கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் நடித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.இந்தப் படத்துக்குப் பிறகு,அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில்,இந்தப் படத்துக்கு ‘சைக்கோ’ எனத் தலைப்பு வைத்துள்ளனர்.வரும் 7ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்,இப்படத்திற்கு பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய,இளையராஜா இசையமைக்கிறார்.இரண்டு ஹீரோயின்கள் நடிக்க இருக்கும் இந்தப் படத்தில்,நித்யா மேனன் மற்றும் அதிதி ராவ் நடிக்கின்றனர்.மேலும், இயக்குநர் ராம் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.வருகிற 6-ம் தேதி இந்தத் தலைப்பை அதிகாரபூர்வமாக வெளியிடும் படக்குழு, 7-ம் தேதியில் இருந்து சென்னையில் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க