• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

’தல’ அஜித்தான் என் இன்ஸ்பிரேஷன்- நெகிழும் சாந்தனு

February 24, 2017 tamilsamayam.com

சண்டை காட்சிகளில் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருப்பது நடிகர் அஜித் குமார்தான்’ என நடிகர் சாந்தனு தெரிவித்துள்ளார்.

நடிகர் சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள ‘முப்பரிமாணம்’ திரைப்படம் வரும் மார்ச் 3-ஆம் தேதி வெளியாகிறது.இந்த படம் ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளதால்,ஸ்டண்ட் காட்சிகளில் சாந்தனு மிகவும் சிரத்தை எடுத்து நடித்ததாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.படத்தின் டிரைலரை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்,சண்டை காட்சிகளுக்காக சாந்தனுவை பாராட்டினாராம்.

இந்நிலையில் ஸ்டண்ட் காட்சிகள் தான் சிறப்பாக செயல்பட முன் மாதிரியாக இருந்தது அஜித் தான் என சாந்தனு கருத்து தெரிவித்துள்ளார்.இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில்,”முப்பரிமாணம் படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு சண்டை காட்சிகளிலும் ,டூப் போடாமல் இரண்டு மடங்கு உழைப்பை அளித்துள்ளேன்.இதற்கு எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது தலதான்..!” என சாந்தனு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க