• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூர்யா செல்வராகவன் படத்தில் இணைந்த முன்னணி நடிகை

January 5, 2018 தண்டோரா குழு

சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து சூர்யா அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்தபடத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கவுள்ளார். இப்படத்தை கடந்த ஆண்டு அருவி, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.புத்தாண்டு முதல் துவங்கப்பட்ட இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள், வரும் பொங்கல் முதல் படப்பிடிப்பு துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

rahul preethi sing

இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்,கார்த்தி ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்த ராகுல் ப்ரீத்தி சிங் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க