• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூர்யா படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் புகழ்!

August 1, 2018 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே. படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளை தொடங்கவுள்ளார்.

இப்படத்தைத் தொடர்ந்து,சூர்யா தனது 37வது படத்திற்காக கே.வி ஆனந்துடன் இணைந்துள்ளார். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து சாயிஷா நடிக்கிறார்.இப்படத்திற்கு ஹரீஷ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.இப்படத்திற்காக லண்டனில் படமாக்கப்பட்ட தனது காட்சிகளை சூர்யா முடித்துக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் சூர்யாவின் ஓபனிங் பாடலை சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ் பாடியுள்ளார்.இப்பாடலை ஞானகரகவேல் எழுதியுள்ளார்.இதற்கு முன்னதாக சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.விரைவில்,ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு பாடலை பாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க