• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘சி3’ இயக்குனருக்கு கார் பரிசளித்த சூர்யா!

February 15, 2017 tamilsamyam.com

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சிங்கம் 3’ திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் படத்தின் இயக்குனர் ஹரிக்கு சூர்யா கார் ஒன்றை பரிச்சளித்திருக்கிறார்.

இயக்குனர் ஹரி – சூர்யா கூட்டணியில் 3 வது பாகமாக உருவாகி வெளியான ‘சிங்கம் 3’ படம் ரசிகர்கள் மத்தியிலும், வசூலில் களைக்கட்டி வருகிறது. இபப்டத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஹரிக்கு ‘டோயடோ ஃபார்ச்சுனர்’ காரை பரிசாக வழங்கி சூர்யா நன்றி தெரிவித்திருக்கிறார்.

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் வெளியான ‘சிங்கம் 3’ திரைப்படம் கடந்த பிப்.9 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. தற்போது வரை பாக்ஸ் ஆபீசில் சிங்கம் 3 திரைப்படம் ரூ.77 கோடி வசூல் செய்திருப்பதாகவும் விரைவில் ரூ.100 கோடியை தாண்டும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க