• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூப்பர்ஸ்டார் ரஜினி ரசிகையாக நடிக்கும் ஜோதிகா ?

May 9, 2018 தண்டோரா குழு

நடிகை ஜோதிகா சூர்யாவை திருமணம் செய்த பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு ’36 வயதினிலே’படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

அதன்பின் மகளிர் மட்டும்,பாலா இயக்கத்தில் நாச்சியார் என அடுத்தடுத்து வெற்றி படங்களில் ஜோதிகாக நடித்திருந்தார்.இந்நிலையில்,மலையாளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடிகை மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான படம் ‘மோகன்லால்’.சஜித் யாஹியா இயக்கியிருந்த இப்படத்தில் மஞ்சு வாரியர் ‘சூப்பர் ஸ்டார்’ மோகன் லாலின் ரசிகையாக நடித்திருந்தார்.இப்படம் ரசிகர்களிடையேயும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது, இப்படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு ‘ரஜினி செல்வி’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனையும் சஜித் யாஹியாவே இயக்கவுள்ளாராம்.இதில் ஹீரோயினாக நடிக்க ஜோதிகாவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.இதுமட்டுமன்றி தமிழில் கதாநாயகி கேரக்டர் நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க