• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சந்தானம் படத்தில் தனது அம்மாவை பாடகியாக்கிய நடிகர் சிம்பு!

March 10, 2017 tamilsamayam.com

சிம்பு தனது அம்மா உஷாவை சந்தானம் படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமாக்கியுள்ளார்.

நடிகர் சந்தானம் தற்போது நடித்து வரும் படம் ‘சக்க போடு போடு ராஜா’. இந்தப் படத்தை வி.டி.வி.கணேஷ் தயாரித்து வருகிறார். படத்திற்கு சிம்பு இசையமைக்கிறார். படத்தில் சந்தானம் ஜோடியாக வைபவி ஷாண்டில்யா நடிக்கிறார். இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள்.

இந்த ஐந்து பாடல்களையும் கம்பேசிங் செய்து விட்டாராம் சிம்பு. இந்த 5 பாடல்களில் ‘வா முனிமா வா’ என்று துவங்கும் பழைய பாடலை தன்னுடைய தந்தை டி.ராஜேந்தர் மற்றும் தாயார் உஷா ராஜேந்தரை பாட வைத்து பதிவு செய்துள்ளார். இந்தப்பாடல் ஹிட்டானால் தொடர்ந்து பாடுவது என்ற முடிவில் இருக்கிறாராம் உஷா ராஜேந்தர்.

அதைப்போல சந்தானத்தின் அறிமுகப் பாடலை அனிருத்தை பாட வைத்து பதிவு செய்துள்ளார் சிம்பு. வைரமுத்து எழுதியுள்ள ‘காதல் தேவதை…’ என்று துவங்கும் பாடலை யுவன் சங்கர் ராஜாவை பாட வைத்துள்ளார். இத்துடன் இந்த படத்தில் இரண்டு புதிய பாடகர்களை அறிமுகப்படுத்தியும் இருக்கிறார் சிம்பு.அவர்களில் ஒருவர் பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணனின் மகன் வாசுதேவ் கிருஷ்ணன். இன்னொருவர் கீர்த்தனா.

மேலும் படிக்க