• Download mobile app
08 Dec 2025, MondayEdition - 3589
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“அடிச்ச கைப்புள்ளைக்கே இந்த நிலைமைனா, அடி வாங்குனவன் நிலைமை?” சந்தானத்தை கிண்டலடித்த ஆர்யா

October 14, 2017 தண்டோரா குழு

சந்தானம் சமீபத்தில் நடந்த வழக்கறிஞருடான அடிதடி சண்டை மூலம்,ஆக்சன் ஹீரோவாக உருவாகிவிட்டதாக நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார்.

நடிகர் சந்தானத்திற்கும் பாஜக பிரமுகர் ஒருவருக்கும் இடையே பணம் தொடர்பான பிரச்சனை மோதலில் முடிந்தது. இதையடுத்து, சந்தனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் தற்போது முன் முன் ஜாமீன் பெற்றுள்ளார்.

இந்நிலையில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள “சக்கப்போடு போடு ராஜா” படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. நடிகர் சந்தானம்,ஆர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து விழாவில் பேசிய நடிகர் ஆர்யா,

நகைச்சுவை நடிகராக இருந்த சந்தானம் எப்படி ஆக்சன் ஹீரோவாக நடிக்க முடியும் என்ற சந்தேகம் முன்பு இருந்ததாகவும், இப்போது அது நீங்கிவிட்டதாகவும் நகைச்சுவையாக கூறினார். அதற்கு காரணம் அண்மையில் நடந்த நிஜமான சண்டை தான் என்றும் நடிகர் ஆர்யா குறிப்பிட்டார். மேலும், அடிச்ச கைப்புள்ளைக்கே இந்த நிலைமைனா, அடி வாங்குனவன் நிலைமை? என கிண்டலாக கூறினார்.

மேலும் படிக்க