 May 24, 2017
May 24, 2017  tamilsamayam.com
tamilsamayam.com
                                கடும் வெயில் காரணமாக ராம்சரண் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் ராம்சரண் தேஜா- & சமந்தா நடித்து வரும் தெலுங்கில் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு ராஜமுந்திரியில் உள்ள பொது இடங்களில் நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது அந்த பகுதியில் கடும் வெயில் அடித்து வருகிறது. இந்த அனல் பறக்கும் கடும் வெயிலால் ராம்சரண், சமந்தா, அனுபமா, பிரகாஷ்ராஜ் மட்டுமின்றி மொத்த படக்குழுவும் ரொம்பவே அவதிப்பட்டு வந்துள்ளனர்.
இதையடுத்து, தற்காலிகமாக அந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்து எப்போது படப்பிடிப்பு தொடங்கப்படும் என்பது அறிவிக்கப்படவில்லை.
மேலும், எதிர்பாராத விதமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால், இப்படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டிருந்த மித்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம், தற்போது பட வெளியீட்டை செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளது.