• Download mobile app
17 Oct 2025, FridayEdition - 3537
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராகவா லாரன்ஸ் விடுத்த சவாலை ஏற்றுக் கொண்டு ஸ்ரீ ரெட்டி வெளியிட்ட வீடியோ !

July 31, 2018 தண்டோரா குழு

தெலுங்கு திரையுலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக கூறி அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி.

ஸ்ரீரெட்டி கடந்த சில வாரங்களாக தமிழ் சினிமா இயக்குனர்கள்,நடிகர்கள் மீது புகார் கூறி வருகிறார்.இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்,நடிகர்கள் ஸ்ரீகாந்த்,லாரன்ஸ்,நடிகரும்,இயக்குனருமான சுந்தர்.சி ஆகியோர் மீது புகார் கூறியுள்ளார்.இதனால் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டிற்கு யாரும் பதில் அளிக்காத நிலையில்,நடிகர் ராகவா லாரன்ஸ் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் ஸ்ரீரெட்டி கூறுவது முற்றிலும் பொய் என்றும்,தவறு நடந்ததாக கூறப்படும் நேரத்தில் பிரபாஸ் நடித்த படத்தை இயக்கிக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார்.மேலும்,மீடியாக்கள் முன்பு ஆடிஷன் நடித்தி அதில் ஸ்ரீ ரெட்டி சிறப்பாக நடித்தால் உடனே என் அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு அளிக்கிறேன் என்று சவால் விட்டார்.

இந்நிலையில் ராகவா லாரன்ஸின் சவாலை ஏற்றுக் கொண்ட நடிகை ஸ்ரீரெட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் இந்த வீடியோ “ராகவா லாரன்ஸ்க்கு” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க