• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஷாருக் கான் பட நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் ஒருவர் பலி விசாரணை நடத்த உத்தரவு

January 25, 2017 tamilsamayam.com

இந்தி நடிகர் ஷாருக் கானின் புதிய படத்திற்கான விளம்பர நிகழ்ச்சியின்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர் ஒருவர் உயிரிழந்தது பற்றி, விரிவான விசாரணை நடத்த, உத்தரவிடப்பட்டுள்ளது.

ஷாருக்கான், மகிரா கான், நவாசுதீன் சித்திக், சன்னி லியோன் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள ‘ராயீஸ்’ திரைப்படம் இன்று (ஜன.25) உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது.

‘ராயீஸ்’ படத்தை வித்தியாசமான முறையில் புரொமோஷன் செய்வதற்காக, மும்பையில் இருந்து தில்லிக்கு செல்லும் அகஸ்த் கிராந்தி ராஜ்தானி விரைவு ரயிலில் படக்குழுவினருடன் ஷாருக்கான் பயணம் செய்தார். இதையொட்டி, வதோதரா ரயில் நிலையத்தில் ஷாருக்கானை காணும் ஆர்வத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.

இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த ரயிலை வேகமாக இயக்கியபோது, ஏராளமானோர் ரயிலுடன் சேர்ந்து ஓடிவந்தனர். இதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, ஒருவர் பலியானார். 3 பேர் காயமடைந்தனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்தும்படி, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, ரயில்வே போலீசாருக்கு உத்தரவிட்டார். இதன்படி, ரயில்வே போலீஸ் படையின் இயக்குனர், வதோதரா ரயில் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார். இதையேற்று, விசாரணை நடத்தி வருவதாக, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முதல்கட்ட விசாரணையில், உயிரிழந்த நபரின் பெயர் ஃபர்ஹீத் கான் பதான். அவர், உள்ளூர் அரசியல் பிரமுகர் என்பதும் தெரியவந்துள்ளது. அவர் இதய நோயாளி என்றும், கூட்டத்தில் சிக்கியதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு, உயிரிழந்துவிட்டார் என்றும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் படிக்க