• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காமெடி நடிகருக்கு மத்திய அமைச்சர் பாராட்டு

April 10, 2017 tamilsamyam.com

காமெடி நடிகர் விவேக்கிற்கு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் பெயரில் பசுமை கலாம் என்ற திட்டத்தின் மூலம் நடிகர் விவேக் மரக்கன்றுகள் நட்டு வருகிறார். ஒரு கோடி மரக்கன்றுகள் நடவேண்டும் என்ற இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். தற்போது வரை 28 லட்சத்து 73 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளார்.

காமெடி நடிகர் விவேக்கின் இந்த சேவையை பாராட்டி மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விவேக் வீட்டிற்கு சென்று பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

முன்னாள் ஜனாதிபதி மேதகு ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் சிந்தனையை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பணியாற்றி வரும் நடிகர் திரு விவேக் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து விவேக் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அவர்களின் எளிமையை பார்த்து வியந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க