• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாகார்ஜூனா மகன் அகில்-ஸ்ரேயா திருமணம் ரத்து?

February 22, 2017 tamilsamayam.com

நடிகர் நாகார்ஜூனாவின் இளைய மகன் அகில் மற்றும் ஸ்ரேயா இடையிலான திருமணம் நிறுத்தப்பட்டுவிட்டதாக, பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகார்ஜூனா. இவர் பிரபல நடிகை அமலாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு, நாக சைதன்யா, அகில் என 2 மகன்கள் உள்ளனர். இதில், மூத்த மகன் நாக சைதன்யாவுக்கு, முன்னணி நடிகை சமந்தா உடன் திருணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, இளைய மகன் அகிலுக்கு, முன்னணி ஆடை வடிவமைப்பாளர் ஸ்ரேயா பூபால் உடன் திருணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. மேலும், இவர்களின் திருமணம் இத்தாலியில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு, திருமண அழைப்பிதழ் அச்சடித்து, விநியோகிக்கப்பட்டது.

இந்நிலையில், திடீரென அகில் திருமணத்திற்கு யாரும் வரவேண்டாம் என, அவசர தகவல் பகிரப்பட்டுள்ளது. திருமண அழைப்பிதழ் பெற்றுக்கொண்ட அனைவரும் தங்களது பயணத்தை ரத்து செய்யும்படியும் நாகார்ஜூனா மற்றும் ஸ்ரேயா குடும்பத்தினர் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், இதற்கான காரணம் பற்றி தெரியவில்லை. ஒருவேளை, இருவரின் திருமணமும் ரத்து செய்யப்படுகிறதா அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறதா என்ற குழப்பம் எழுந்துள்ளது.

மேலும் படிக்க