• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேயாதமான் பட இயக்குநருடன் இணைந்த அமலா பால்

August 15, 2018 தண்டோரா குழு

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஸ்டோன் பென்ச்’ சார்பாக தயாரித்த படம் ‘மேயாத மான்’.

அறிமுக இயக்குநர் ரத்தின குமார் இயக்கிய இப்படத்தில் வைபவ்,ப்ரியா பவானி சங்கர்,இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.தனது முதல் படத்திலேயே திறமை வெளிப்பெடுத்தி திரை விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்ற இயக்குநர் ரத்தின குமார் தனது அடுத்த படத்தை இயக்க தயாராகியுள்ளார்.

அப்படத்தில் அமலா பால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளராம்.உணர்ச்சிகரமான கதை களத்தை கொண்ட இந்த படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதினாலேயே அமலா பால் மற்ற பல படங்களை தவிர்த்து இந்த படத்தை ஒப்புக்கொண்டுள்ளாராம்.

பொதுவாகவே இது மாதிரியான கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை பீமேல் ஓரியன்ட் அல்லது பெண்கள் முன்னேற்றத்திற்க்கான படம் அல்லது சூப்பர் நாச்சுரல் ஹாரர் சினிமா என்று தான் சொல்வார்கள்.ஆனால்,இந்த படம் மேற் சொன்ன எந்த வகையிலும் சாராத அந்த முன் கணிப்புகளை உடைத்தெறியும் உணர்ச்சிகரமான பரபரப்பான கதையின் திரை வடிவம் என்று சொல்லப்படுகிறது.

“ஆடை” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் மற்ற கதா பாத்திரங்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க