• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூர்யாவுக்கு பிரம்மாண்ட கட்-அவுட்! எத்தனை அடி தெரியுமா.?

January 10, 2018 tamil.cinemapettai.in

சூர்யா நடித்து பொங்கலுக்காக வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வர இருக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’ விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இந்த படத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், நவரச நாயகன் கார்த்திக் ,ரம்யா கிருஷ்ணன் மேலும் பல சினிமா பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் நவம்பர் 30-ம் தேதி வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதுமட்டும் இல்லாமல் தானா சேர்ந்த கூட்டத்தின் வெளியான செகன்ட் லுக் விவேகம் , மெர்சல் சாதனையை சமீபத்தில் முறியடித்தது.

அஜித் விஜய் ரசிகர்கள் தான் இதுபோல் சாதனையை நடத்துவார்கள் தற்பொழுது சூர்யா ரசிகர்களும் இந்த லிஸ்டில் சேர்ந்துள்ளார்கள்.படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் நெல்லையில் உள்ள ராம் சினிமாஸில் சூர்யாவுக்கு ரசிகர்கள் ஒரு பிரமாண்ட கட்-அவுட் வைக்கவுள்ளனர். அது 140 அடி உயரம் இருக்கும் என கூறியுள்ளனர். இதற்க்கு முன் இதே தியேட்டரில் விஜய்யின் மெர்சல் படத்திற்கு 120 அடி உயரத்திற்கு மட்டுமே கோட்டை போன்ற கட்-அவுட் வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க